கடுகுக் கீரையில் அப்படி என்ன இருக்கு?

கடுகுக்கீரைல கிடைக்கற பலன்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டா நீங்களும், நானும் கூட நிச்சயம் ஒருமுறை இதை சமைச்சு சாப்பிட ட்ரை பண்ணுவோம். அவ்ளோ நல்ல பலன்கள் எல்லாம் இதுல இருக்கு.
கடுகுக் கீரையில் அப்படி என்ன இருக்கு?

தினமும் கீரை சாப்பிடனும்னுங்கற கொள்கையோட வாழ்றவங்க எத்தனை பேர் இருக்கீங்க?

உங்களுக்கெல்லாம் லட்டு மாதிரி ஒரு தகவல் சொல்லப் போறோம்.

ஆமாம்... தினமும் கீரை சேர்த்துக்கும் போது.. ஒருபக்கம் இன்னைக்கு என்ன கீரை சமைக்கலாம்னு சில நேரம் குழப்பமாயிடும்.

இன்னொரு பக்கம், அடடா இதென்ன போன வாரம் சமைச்ச கீரையையே இந்த வாரமும்  சமைக்கறதான்னு கொஞ்சம் அலுப்பு கூட தட்டிடும்.

ஸோ... அலுப்பு, சலிப்பு இல்லாம புதுசு, புதுசா கீரை சமைச்சு சாப்பிட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சு கண்டுபிடிச்சது தான் இந்த கடுகுக் கீரை.

தாளிக்க கடுகு சேர்த்திருப்பீங்க. அதே கடுகுக்கீரை வளர்த்துப் பழகி இருக்க மாட்டீங்க தானே?!

ஒரு சேஞ்சுக்கு ஒரு சின்ன மண் தொட்டியில கடுகு வளர்த்து கீரை அறுவடை பண்ணி சமைச்சுப் பாருங்களேன்.

டேஸ்ட் நல்லா தான் இருக்கும்னு சொல்லிக்கறாங்க, ஏற்கனவே சமைச்சு சாப்பிட்டவங்க.

கடுகுக்கீரைல கிடைக்கற பலன்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டா நீங்களும், நானும் கூட நிச்சயம் ஒருமுறை இதை சமைச்சு சாப்பிட ட்ரை பண்ணுவோம். அவ்ளோ நல்ல பலன்கள் எல்லாம் இதுல இருக்கு.

கடுகுக் கீரையின் பலன்கள்...

கடுகுக் கீரையில ஹை லெவல் ஆஃப் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கு. ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் எதுக்கு முக்கியம்னா நம்முடைய உடலில் ஃபிரீ ரேடிக்கல்ஸ் அதிகளவுல உற்பத்தியாகி உடல் செல்களை சிதைக்காம கட்டுப்படுத்த இந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் ரொம்ப முக்கியம். கடுகுக் கீரையில இந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவுல இருக்கறதால நாம அதை சமைச்சு சாப்பிடும் போது ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸோட முழுப் பலனும் நமக்கு கிடைக்கும்.

அது மட்டுமில்லாம நம்முடைய கல்லீரல் மற்றூம் ரத்தத்தில் இருக்கக் கூடிய நச்சுப் பொருட்களை நீக்கி அந்த உறுப்புகளை டீடாக்ஸிஃபை பண்ணவும் கடுகுக்கீரை உதவும்.

கொலஸ்டிராலைக் குறைக்க உதவும்

கடுகுக் கீரையில் ஃபைட்டோநியூட்ரியண்ட்ஸ் நிறைய இருக்கு. இந்த ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் எதுக்கு உதவுதுன்னா... இதுல ஆண்ட்டி இன்ஃபிளமேட்டரி அண்ட் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் மூலக்கூறுகள் நிறைய இருக்கு. இந்த ரெண்டுமே உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தக் கூடியவை ஆண்ட்டி இன்ஃப்ளமேட்டரி மூலக்கூறுகள் நம் உடல் செல்களில் காயம் ஏற்பட்டால் அதைச் சரி செய்து செல்களின் ஆரோக்யமான வளர்ச்சிக்கு உதவும். அதனால அதுக்குக் காரணமான ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் அதிகமா இருக்கற இந்த கடுகுக் கீரையை நாம வாரத்துல ஒரு நாளாவது சாப்பிட்டா நல்லது தானே!

அதோட மத்த எல்லாவிதமான கீரை வகைகளையும் போல இந்தக் கீரையிலும் நார்ச்சத்து அதிகம். மலச்சிக்கலை கண்டிப்பா இல்லாம பண்ணிடும்.

கூடுதலா இதுல போன் பில்டிங் விட்டமின்ஸ்னு சொல்லப்படக் கூடிய விட்டமின் டி சத்து நிறையவே இருக்கு. ஸோ எலும்புகள் பலப்படவும் இது உதவுது.

அதோட நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக் கூடிய விட்டமின் சி சத்தும் இதுல அதிகமா இருக்கு.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் எல்லாக்கீரை வகைகளுக்கும் இருக்கக் கூடிய பொதுவான குணங்களில் ஒன்றான சருமம் மறும் கண்களுக்கு ஆரோக்யம் தரக்கூடிய பலன்களும் இந்தக் கீரையிலும் இருக்கு.

இப்படியான பல பாஸிட்டிவ்வான காரணங்கள் இருக்கறதால நாம கடுகுக் கீரையையௌம் வாரம் ஒருநாள் சமைத்து சாப்பிடப் பழகிக்கிட்டா நல்லது.

இன்னொரு முக்கியமான விஷயம் இந்தக் கடுகுக் கீரையை நாம கடைக்குப் போய் தான் வாங்கனும்னு அவசியமில்லை இதை நாம வீட்லயே கூட தொட்டியில் வளர்க்கலாம். இன்னைக்கு நைட் தூவி விட்டீங்கன்னா மறுநாளே முளை விட்டு வளர்ந்திடும். ஜன்னல் திட்டுல வச்சுக்கூட வளர்த்துடலாம் இந்தக் கடுகுக் கீரையை.

சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கன்னி, வல்லாரை, பசலைக்கீரைன்னு வழக்கமா நாம சாப்பிடற கீரை வகைகளையே தொடர்ந்து மறுபடி, மறுபடி சாப்பிடாம இப்படி கடுகுக்கீரையையும் வாரத்துல ஒருநாள் சாப்பிடலாம் தானே!

சமைச்சு சாப்பிட்டுட்டு கிடைக்கக் கூடிய அனுபவ பலன்களை எங்களுக்கு எழுதுங்க...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com