கோப்புப் படம்
கோப்புப் படம்

சுவாச தொற்றுகள் குழந்தைகளை பாதுகாத்தனவா? ஆய்வு சொல்வது இதுதான்!

சுவாச தொற்றுகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கின்றன: ஆய்வு முடிவு
Published on

அடிக்கடி ஏற்படும் சுவாச தொற்றுகள் மற்றும் கிருமிகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்ததால் கோவிட்-19 இல் இருந்து அவர்களை காக்க உதவியதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

வயதானோர்களைவிட குழந்தைகள் சுவாச தொற்றுகளுக்கு எளிதில் ஆளாகின்றனர். அதனாலேயே சார்ஸ்-கோவ்-2 என்கிற கரோனா கிருமி பாதிப்பு குறைவாக இருந்ததுடன் மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதியாவது தொற்று காலத்தில் குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கரோனா காலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை மீள் ஆய்வு செய்துள்ளனர்.

19 வெவ்வேறான சுவாச தொற்று வைரஸ் மற்றும் பேக்டீரியாக்களையும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இயல்பான உடல் தற்காப்பு அமைப்பால் உருவாகும் வைரஸ் மற்றும் தொற்றுக்கு எதிரான புரதங்களையும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

சோதனை ரீதியிலான மருத்துவ ஆய்விதழில் வெளியான இந்த அறிக்கையில் ஏராளமான குழந்தைகள்- அவர்களுக்கு நோய் அறிகுறியே இல்லாதபோதும்- கோவிட் வைரஸ் தவிர்த்த மற்ற கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவிலான தோற்று கிருமிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு அதிகமாக உள்ளது. குழந்தைகளிடமும் பதின்பருவத்தினரிடமும் இந்த தொற்று எதிர்ப்பு அவர்களின் இயல்பான நோய் எதிர்ப்பு திறனை செயல்பாட்டில் வைத்திருந்ததாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com