ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முட்டையின் மஞ்சள்கருவை சாப்பிடக்கூடாதா?

முட்டையில் உள்ள மஞ்சள் கருவை சாப்பிடலாமா?

News image
கோப்புப்படம்- ENS
Updated On :12 அக்டோபர் 2024, 12:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

முட்டை புரதச்சத்து அதிகமுள்ள, நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஓர் உணவுப் பொருள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனைச் சாப்பிட சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12, போலேட், பயோட்டின் ஆகிய சத்துகளும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம், ஜிங்க் ஆகிய தாதுக்களும் ஆன்ட்டி-ஆக்சிடன்ட் எனும் நோயெதிர்ப்புப் பொருள்களும் அதிகம் உள்ளன.

ஒரு முட்டையில் 75 கலோரிகள் உள்ளன. 7 கிராம் புரோட்டீன், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் இரும்பு, வைட்டமின், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் ஆகியவை உள்ளன.

இதுவரை 20 அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 11 அமினோ அமிலங்களை உடலே உற்பத்தி செய்யும். எஞ்சிய 9 அமினோ அமிலங்களை உணவு மூலமாகவே உடல் பெற முடியும். இந்த அத்தியாவசிய 9 அமினோ அமிலங்கள் கொண்ட ஒரே உணவுப்பொருள் 'முட்டை' என்பது கூடுதல் தகவல்.

ஒட்டுமொத்த முட்டையின் புரத அளவில் 50%க்கும் மேலான புரதம் அல்புமென் எனும் வெள்ளைக்கருவில் உள்ளது. வெள்ளைக்கருவில் ஓவல்புமின் என்ற புரதம் அதிகமாக உள்ளது. நீர்ச்சத்தில் 90% வெள்ளைக்கருவில்தான் இருக்கிறது. வைட்டமின்களில் பி2, பி5 மட்டுமே இதில் உள்ளது. இந்த வைட்டமின்களின் அளவும் மிகக் குறைவே.

வெள்ளைக்கருவில் ஒரு சதவீதம் கூட கொழுப்பு கிடையாது. எனவே டயட்டில் இருப்பவர்கள் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுகின்றனர்.

ஆனால், முட்டையின் முழுச் சத்துகளைப் பெற இரண்டையும் அதாவது முழுவதுமாக முட்டையை சாப்பிட வேண்டும் என்றே மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

வெள்ளைக்கருவில் 18 கிராம் கலோரி, புரதம் 4 கிராம், வைட்டமின் பி2, பி5 சத்துகள் உள்ளன.

அதுவே மஞ்சள் கருவில் 71 கிராம் கலோரி. 6 கிராம் புரதச்சத்து, 5 கிராம் கொழுப்பு உள்ளது. வைட்டமின் பி2, பி5 ஆகியவை வெள்ளைக்கருவைவிட அதிகம் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி12 உள்ளிட்ட சத்துகள் மஞ்சள்கருவில்தான் இருக்கின்றன.

மேலும், மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு ஹெச்.டி.எல்.(லிப்போ புரதம் அதிகமுள்ள கொழுப்பு) எனும் நல்ல கொழுப்பு. அது உடலுக்குத் தேவையானதும்கூட. இந்த கொழுப்பு இதய நோய்களில் இருந்தும் பக்கவாதத்தில் இருந்தும் பாதுகாக்கிறது.

மஞ்சள் கருவில் கலோரி அதிகம் என்றாலும் அதில் சத்துகள் நிறைந்திருப்பதால் அதையும் சாப்பிடவே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கண்கள், மூளை, இதயம், தசைகள் என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமான உணவுதான் முட்டை.

தினமும் முட்டை சாப்பிடலாமா?

முட்டை ஒரு முழுமையான புரதம் மிக்க உணவு. எனவே, இதனை தினமும் சாப்பிடலாம்.

தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் முட்டை உடல் எடையைக் குறைக்கிறது.

முட்டையை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும். இது உடலில் கொழுப்பைக் கரைக்கிறது. பசியைக் குறைக்கிறது. கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது.

முடிந்தவரை மற்ற உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற கொழுப்பு அமிலம் உள்ளதால் உடல் எடையைக் குறைப்பதுடன் இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் முட்டையில் நோயை எதிர்க்கக்கூடிய சத்துகள் உள்ளன.

பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 2-3 முட்டை தாராளமாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் தினமும் ஒன்று கொடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதேநேரத்தில் முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவது தொற்றை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.

அதாவது ஹாப்-பாயில், அப்படியே குடிப்பதைத் தவிர்க்கவும். மாறாக முட்டையை அவித்தோ, ஆம்லெட் அல்லது பொடி மாஸ் செய்தோ சாப்பிடலாம். அதாவது முழுவதுமாக வேகவைத்து சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.