இடைத்தேர்தலுக்குத் தயாராகும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

Puducherry Thattanchavady gears up for the by-election

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தயார் நிலையில் வாக்குப்பதிவு மையங்கள்... - DIN

Published On :

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (அக். 6, செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக். 9 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தட்டாஞ்சாவடி இடைதேர்தலைப் பொருத்தவரை 31 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள் மட்டும் பணியாற்றும் 1 வாக்குச் சாவடியும் அடங்கும். மேலும், 2 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வயதானவர்கள், மற்றும் மாற்றுதிறனாளிகள் வந்து வாக்களிக்கும் வகையில் சாய்வுதள பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி வாயில் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எவ்வித சிறமமுமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இன்று பிற்பகல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், சரிபார்ப்பு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தட்டாஞ்சாவடி தொகுதியில் வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை தட்டாஞ்சாவடி தொகுதியில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான பணம், நகைகள், போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

Summary

Puducherry Thattanchavady gears up for the by-election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER