

வீட்டில் அனைத்து விதமான சமையலிலும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள் மஞ்சள்.
சுவை, நிறத்துக்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சளை உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதம் மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது.
ஆனால் இந்த மஞ்சளில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
லாபத்திற்காகவும் நிறத்தை மேம்படுத்தும் பொருட்டும் அதில் செயற்கை நிறமிகள், தீங்கு விளைவிக்கும் சாயங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கலக்கின்றனர்.
மெட்டானில் மஞ்சள், லெட் குரோமேட், சுண்ணாம்பு தூள், காட்டு மஞ்சள் ஆகியவை கலக்கப்படுகிறது. இவை உடல்ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளைக் கண்டறிவது எப்படி? என பார்க்கலாம்.
சிறிது மஞ்சள் எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்து 10 - 20 நொடிகள் தேய்த்து பின்னர் கழுவவும். லேசான மஞ்சள் கறை இருந்தால் அது தூய மஞ்சள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது நேரத்தில் மஞ்சள் தூள் அனைத்தும், டம்ளரில் கீழே தங்கிவிட்டால் அது நல்ல மஞ்சள். கீழே படியவில்லை என்றால் அது கலப்படம் செய்யப்பட்டது. சில துகள்கள் மேலே மிதந்தாலும் அதில் கலப்படம் இருக்க வாய்ப்பு அதிகம்.
அதேபோல மஞ்சள் கலக்கப்பட்ட தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தால் தூய்மையானது. கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அடர்த்தியான மஞ்சளாக இருக்கும்.
இதையும் படிக்க | மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படும் பதின்வயதினர்! ஏன்? தீர்வு என்ன?
ஆய்வக சோதனை
மஞ்சள் தூளை ஒரு சோதனைக்குழாயில் போட்டு அதில் சிறிது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை ஊற்றிக் கலக்கவும்.
அது வெளிர் சிவப்பு(பிங்க்) நிறமாக மாறினால் அதில் மெட்டானில் அதிகம் கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இது வயிற்று வலி, குமட்டல், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
இதற்கு மஞ்சள் கிழங்கை வாங்கி காய வைத்து அரைத்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தினப்பலன்கள் - மகரம்
பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா?

எப்படி நிகழ்ந்தது அது?

கலப்பட மஞ்சள்: புகாா் அளிக்க உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

