இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருச்சியில் 195 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை!

திருச்சி மாவட்டத்தில் 195 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2019, 8:16 am

எம். முருகன்

திருச்சி மாவட்டத்தில் 195 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறும் ஊரகப் பகுதி தேர்தலுக்காக 14 ஒன்றியங்களில் 2,275 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், 195 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவுகளை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்படும். இதுமட்டுமல்லாது விடியோ ஒளிப்பதிவாளர் மூலம் வாக்குப் பதிவு பணிகள் அனைத்தும் முழுமையாக விடியோ பதிவு செய்யப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகள் ஒவ்வொன்றுக்கும் நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து தரப்பும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.