இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சாமக்கோடாங்கி வேடமிட்டு வாக்குச்சேகரித்த திமுக பிரமுகர்

தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திமுக தலைமைக்கழகப் பேச்சாளர் சேலம் கோவிந்தன் சாமக்கோடாங்கி வேடமிட்டு,

News image
Updated On :26 டிசம்பர் 2019, 10:09 am

DIN

ஈரோடு: தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திமுக தலைமைக்கழகப் பேச்சாளர் சேலம் கோவிந்தன் சாமக்கோடாங்கி வேடமிட்டு, குடுகுடுப்பை அடித்து, பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சேகரிப்பு என்பது சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் வாக்குச்சேகரிப்பில் இருந்து மாறுபட்டு இருக்கும். வீடு, வீடாக சென்று வாக்குச்சேகரிப்பது, பிற ஜாதியினரையும் உறவு முறையால் அழைப்பது, பெரியவர்களின் பாதம் பணிந்து வாக்குக்கேட்பது போன்ற வித்தியாசமான வாக்குச்சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபடுவர்.

அந்த வகையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் சாமக்கோடங்கி வேடமணிந்து நூதன முறையில் வாக்குச்சேகரித்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம் பெருமுகை, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணநாகர் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இவர் சாமக்கோடங்கி வேடமிட்டு வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

Story image

சாமக்கோடாங்கி வேடமிட்டு,  குடுகுடுப்பை அடித்தபடி வாக்குச் சேகரித்து வருவது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உண்மையான சாமக்கோடாங்கி வந்துள்ளார் என நினைத்து வீட்டிற்கு வெளியில் வரும் பெண்களுக்கு ஏமாற்றம் என்றாலும், அவர் வாக்குக்கேட்கும் முறை ஆர்வத்தை தூண்டுகிறது. இதனால் அவர் அங்கிருந்து புறப்படும் வரை அவர் பேசுவதை கேட்கின்றனர்.  

மூதாட்டிகள் சிலர் உண்மையாகவே சாமக்கோடங்கி வந்துள்ளார் என நினைத்து குறி கேட்கின்றனர். அப்போது திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்,  உங்கள் குடும்ப பிரச்னைகள் தீர்ந்துவிடும் எனக்கூறிவிட்டு விரைவாகச் சென்று விடுகிறார் சேலம் கோவிந்தன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.