கோவையில் வாக்குச்சாவடி மையங்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட ஓட்டுப் பெட்டிகள்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதற்காக ஒன்றிய அலுவலகங்களில் இருந்து ஓட்டுப் பெட்டிகள் மற்றும் பேனா, பென்சில், மை, அட்டைப்பெட்டி உள்ளிட்ட 72 பொருட்கள் அடங்கிய சாக்குப்பைகளும் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வியாழக்கிழமை எடுத்துச்செல்லப்பட்டது.

ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சிகளில் 105 வாக்குச்சாவடி மையங்களும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளில் 129 வாக்குச்சாவடி மையங்களும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் 183 வாக்குச்சாவடி மையங்களும், கிணத்துக்கடவில் 34 ஊராட்சிகளில் 151 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...