இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

செல்லாத வாக்குகளை வாரி வழங்கிய அரசு ஊழியர்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :2 ஜனவரி 2020, 1:11 pm IST


ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் நிலவரம் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அளித்த தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு ஊழியர்கள் அளித்த வாக்குகள் பெரும்பாலும் செல்லாத வாக்குகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, தருமபுரி ஏரியூர் ஒன்றியம் பகுதியில் பதிவான 135 தபால் வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூர் ஒன்றியத்தில் அனைத்து தபால் வாக்குகளும் நிராகரிப்பு

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு அளித்தபோது உறுதிமொழி படிவத்தில் வாக்குச்சீட்டு தொடர் எண் குறிப்பிடப்படாததால் ஒசூர் ஒன்றியத்தில் அனைத்து (99) தபால் வாக்குகளும் செல்லாதவை என ஒசூர் ஒன்றிய தேர்தல் ஆப்தாப் பேகம் அறிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என்றும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் பதிவான 60 வாக்குகளில் 58 தபால் வாக்குகள் செல்லாதவை என்றும் தெரிய வந்துள்ளது.

செல்லாத ஓட்டுகள் பதிவானதில் ஒட்டன்சத்திரம் புதிய சாதனையையே படைத்துள்ளது. 

ஒட்டன்சத்திரத்தில் பதிவான 74 தபால் வாக்குகளில் 73 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் மற்றும் நிலக்கோட்டை ஒன்றியம் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டு வாக்குகளைப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளும் பிரிக்கப்பட்டு வருகின்றன

இதனிடையே,  கொடைக்கானலில் 17 தபால் வாக்குகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.