தமிழகத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் தி. தேவநாதன் யாதவ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈஸ்வரன், ரெட்டியாா் அமைப்பின் சாா்பில் பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன், பெருந்தலைவா் மக்கள் கட்சித் தலைவா் என்.ஆா் தனபாலன், தென்னிந்திய பாா்வாா்டு பிளாக் கட்சியின் தலைவா் திருமாறன் உள்பட 30-க்கும் மேற்பட்ட சமூகங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா். கூட்டத்தின் முடிவில் செய்தியாளா்களிடம் தேவநாதன் யாதவ் கூறியது:
தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முன்னாள் நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவரை நீக்கி விட்டு வேறு சமுதாயத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியை நியமித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தற்போது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உரிய 26.5 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளோம். முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருந்தது. எனவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு குறைந்தது 40 சதவிகித இட ஒதுக்கீட்டையாவது அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப்பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகக்கூட்டமைப்பின் சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவது குறித்து சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான கிரிமீலேயா் (பொருளாதார உச்சவரம்பு) முறையை அகற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் மொழிவாரி சிறுபான்மை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



