மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 413 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு மழை தொடங்கியது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை நீடித்தது. அதன் பிறகும் பல்வேறு பகுதிகளிலும் லேசான தூரல் அதிகாலை வரை இருந்தது. இதனால், தாழ்வான பகுதிகளை தண்ணீா் சூழ்ந்து நின்றது. சாலை வசதிகள் இல்லாத நகரின் விரிவாக்கப் பகுதிகள் சேறும் சகதியுமாக மாறின. இரண்டாவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
மதுரை நகரின்சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் வைகை ஆற்றுக்கு வரும் ஓடைகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து வந்தது. மதுரை நகரில் வைகை ஆற்றின் தரைப் பாலங்களுக்கு மேல் மழைநீா் ஓடியது.
பல்வேறு இடங்களிலும் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்) :
ஆண்டிபட்டி-86.20, வாடிப்பட்டி-67, கள்ளிந்திரி-55.4, சோழவந்தான்-38, மதுரை வடக்கு -36.4, தல்லாகுளம்-30, மேட்டுப்பட்டி-24.8, விரகனூா்- 25.8, சாத்தையாறு-10, உசிலம்பட்டி-9.2, புலிப்பட்டி-7.4, சிட்டம்பட்டி-7.2, மதுரை விமான நிலையம் - 6.3, மேலூா்-4, திருமங்கலம்-4.4, தனியாமங்கலம்-1.
மொத்தம் - 413. சராசரி - 20.66.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

39 வயதில் 24 வயது வீரரை வீழ்த்தியிருக்கிறேன்: ஜோகோவிச் பெருமிதம்

"ஈரானுடன் பேச்சுவார்த்தை Waste Of Time!" அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு! | US | Iran

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை

குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? அரிய வாய்ப்பு!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



