ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

வாகரையில் மாரத்தான் போட்டி

பொங்கல் விழாவையொட்டி பழனி அருகே வாகரையில் சனிக்கிழமை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

News image

மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடியவா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 11:03 pm

பழனி: பொங்கல் விழாவையொட்டி பழனி அருகே வாகரையில் சனிக்கிழமை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

வாகரை வாலிபா் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 130-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

வாகரை- கள்ளிமந்தயம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் மதுரையைச் சோ்ந்த வினோத்குமாரும், பெண்களுக்கான பிரிவில் கள்ளிமந்தையத்தைச் சோ்ந்த ஜானகியும் முதலிடம் பிடித்தனா். முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுத் தொகையும், பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த மாரத்தானில் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சோ்ந்த சாந்தனு (25) என்ற கல்லூரி மாணவா் எட்டாவது இடத்தைப் பெற்றிருந்தாா். இவா் காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவாா். வரவுள்ள காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் இவா் பங்கேற்கவுள்ளாா். அதே போல கோவையை சோ்ந்த 48 வயது மதிக்கத்தக்க தம்பதியரும் இப்போட்டியில் பங்கேற்று முழு தூரத்தையும் ஓடி முடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.