எம்ஜிஆரைச் சூழ்ந்திருந்த பெண் சக்திகள்...

அ.இ.அ.மு.க. 38 ஆண்டுகளில் 21 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் மக்களால் அமர்த்தப்பட்டு ஏழை, எளிய மக்கள், இல்லாதவர்கள், இயக்கமாக இப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
எம்ஜிஆரைச் சூழ்ந்திருந்த பெண் சக்திகள்...

ஜானகி இராமச்சந்திரன்...
 

ஜானகி இராமச்சந்திரன்: (பிறப்பு: 1924 செப்டம்பர் 23)  

வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை, இவர் எம். ஜி. ஆருக்கு மூன்றாவது மனைவி. வி. என். ஜானகி, கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு மணி @ நாராயணன் என்னும் தம்பி இருந்தார். ஜானகி 1936 ஆம் ஆண்டில், தனது 12 ஆவது வயதில், தன் தாயாருடன் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவனுக்கு தம்பியான இராசகோபலய்யர். சிறிது காலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார். 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மெட்ராஸ் மெயில்’  திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

எம்.ஜி.ஆர் 1987 டிசம்பர் 24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர் 1988 சனவரி 7 ஆம் நாள் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் சட்ட மன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 சனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார். எம்.ஜி.ஆர் இன் மறைவிற்குப் பின்னர் அவரைப் பொதுச்செயலாளராகக் கொண்டு இயங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு பிரிவுகளாகப் பிரிந்தது. இதில் ஜானகி, ஜெயலலிதா தலைமையிலான அணிகள் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டி இட்டன. இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அ. இ. அ. தி. மு. க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி,. ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார். ஜானகி அரசியலில் இருந்து விலகி எம்ஜிஆரின் இராமவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். 1996 மே 19 ஆம் நாள் காலமானார்.

ஜெ. ஜெயலலிதா...
 
ஜெயலலிதா என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமளவள்ளி. கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம், வேதவல்லி தம்பதியரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், சர்ச் பார்க் ப்ரசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து 1964 ஆம் ஆண்டு மெட்ரிக்கில் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த அதே நேரத்தில் திரைப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பின் மீது பெரு விருப்பம் இருந்தும் கூட தனது குடும்பச் சூழலை எண்ணி தாயாரின் அறிவுறுத்தலின் படி படிப்பை கைவிட்டு நடிகையானார். 

ஸ்ரீதர் இயக்கிய ‘வெண்ணிற ஆடை’ என்கிற படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

1980 ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதாவை 1983 ஆம் ஆண்டு அதிமுகவின் பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக தீவிரமாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார். அரசியலில் ஜெயலலிதா எப்போதுமே எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராகவே திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதாவை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார்.

1984ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு 185 வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1981-ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த தீர்மானித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அதை சிறப்பாக நடத்தி முடிக்கும் பொறுப்பை செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார். அந்த மாநாட்டில் ‘காவிரி தந்த கலைசெல்வி’ என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக  சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆனார் ஆர்.எம்.வீரப்பன். அதன்பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து; அதாவது 1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. பிறகு ஜூலையில் தான் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல்  அந்த திட்டத்திற்கு நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார். 

சத்திணவு திட்டத்தின் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவருக்குச் சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவிலும் இடம் கொடுத்தார். தொடர்ந்து இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர்., 1983-இல் கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். கொ.ப.செயலாளரான ஜெயலலிதா இன்னும் தீவிரமாக தமிழகத்தைச் சுற்றிவந்தார். அப்படிச் சுற்றிய ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் அபார வரவேற்பு கொடுத்து அசத்தினர் தொண்டர்களும், உள்ளூர் நிர்வாகிகளும். எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கினர்.
அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெ. எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்க்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான். ஜெ.,விடம் இருந்த பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, ஹிந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசாபா உறுப்பினராக்கினார். மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். 

அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பின்னால், இரண்டான கழகத்தை ஒன்றாக்கி முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டு, கழகத்தை ஒரே குடும்பமாக்கி கழகத்தை வழிநடத்தி 1991ஆம் ஆண்டும் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் செல்வி.ஜெயலலிதா தலைமையில் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது.எம்.ஜி.ஆருக்குப் பின் 1988 ஆம் ஆண்டு 1991 மூன்று ஆண்டுகளும், 1996 ஆம் ஆண்டு 2001 வரை 5 ஆண்டுகளும் ஏறத்தாழ 8 ஆண்டுகள் செல்வி ஜெயலலிதா கருணாநிதியின் அரசு மற்றும் அதிகாரத்தை எதிர்த்து கழகத்தை கட்டிக் காத்ததோடு மட்டுமல்லாமல், பல வழக்குகளை எதிர்கொண்டார். 1996ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு  28 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியே வந்து கழகத்தை மேலும் வலிமையுள்ளதாக்கி கருணாநிதியையும், அவர்தம் அடக்குமுறையையும் தவிடு பொடியாக்கினார். கழகத்திற்கு மட்டுமல்ல கழகத்தின் தலைவர்கள் முதல் அதன் உறுப்பினர்களான அடிமட்டத்தொண்டர்கள் வரை அனைவருக்குமே தாயானார். இந்திய துணைக்கண்டம் உற்றுநோக்கும் முதல்வர் ஆனார்.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1, 2 நாட்களில் நெல்லையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற கழகத்தின் 25ஆம் ஆண்டும் ஆண்டு நிறைவு வெள்ளி விழா மாநாட்டில் இந்திய அரசியலில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையாக கட்சி தலைவர்கள் (அத்வானி, டாக்டர் ராமதாஸ், வைகோ, கம்யூனிஸ்டு தலைவர்கள்) பங்கேற்ற மாநாட்டை நடத்தி மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியை தமிழகத்தில் அமைத்துக் காட்டுவேன் என்று சூளுரைத்து 2001ல் கருணாநிதியை தமிழக அரசு கட்டிலிலிருந்து தூக்கி எறிந்தார்.

அ.இ.அ.மு.க. 38 ஆண்டுகளில் 21 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் மக்களால் அமர்த்தப்பட்டு ஏழை, எளிய மக்கள், இல்லாதவர்கள், இயக்கமாக இப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. பயங்கரவாதம், பிரவினைவாதம், தீவிரவாதம் தலைதூக்கா வண்ணம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி உள்ளார். வறட்சி மற்றும் சுனாமி போன்ற இயற்க்கை சீற்றத்திலும் துரித நிவாரணப் பணிகளால் தமிழக மக்கள் நிம்மதியாக சீரான வாழ்க்கை நடத்த முழுவீச்சில் அரசு எந்திரத்தை இயக்கியவர் ஜெயலலிதா. அவரது தலைமையிலான அரசு செய்துள்ள உழவர் பாதுகாப்புத் திட்டம் வேறு எவருடைய ஆட்சியிலும் செய்யப்படவில்லை என்பதோடு வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகளுக்கு செய்யப்படவில்லை என்பது வரலாற்று உண்மை.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி கழகத்தின் உள்கட்சித் தேர்தலை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நடத்தி முடிக்கின்ற பெரிய கட்சி என்ற சிறப்பை ஜெயலலிதா நிலைநாட்டி உள்ளார். கழக குடும்பத்தில் ஒரு உறுப்பினர் அகால மரணமடைந்தாலும் கழகத்தின் சார்பில் குடும்ப நிதி வழங்கி பாதுகாப்பதோடு படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வித் தொகை வழங்கி கழகத்தினருக்கு காத்து வருகின்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com