அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

"நீட்ஸ் திட்டத்தை தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை (நீட்ஸ்) இளைஞர்கள் மற்றும் பெண்கள்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 12:55 pm IST

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை (நீட்ஸ்) இளைஞர்கள் மற்றும் பெண்கள் சிறப்பான முறையில்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

நாகை இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்ட (நீட்ஸ்) விழிப்புணர்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:

அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை அதிகளவில் உருவாக்கும்  வகையிலும், புதிய தொழில்முனைவோரை உருவாக்கும்  வகையிலும் தமிழக அரசு நீட்ஸ் திட்டத்தை  செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் முதல், அதிகபட்சம் ரூ. 1 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

21 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பொது பிரிவினரும், 45 வயதுக்குள்பட்ட சிறப்புப் பிரிவினரும் இத்திட்டத்தில் பயனடையலாம். இத்திட்டத்தில் 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுத் தொழில் நிறுவனம் அமைக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் திட்டத்தை நாகை மாவட்ட இளைஞர்கள், பெண்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழில் வளத்தை மேம்படுத்த உறுதுணையாகச் செயல்பட வேண்டும் என்றார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் என்.எம். சிவசாமி, நபார்டு பொது மேலாளர் டி. கணேஷ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தொழில் வளர்ச்சி அலுவலர் டி. சந்தானம், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் (பொறுப்பு) சா. அரசு, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் எம்.என். சீனிவாசன், மாவட்ட சிறுதொழில் சங்கத் தலைவர் என். பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.