சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

நாகையில் உணவக உரிமையாளரை தாக்கிய 4 போ் மீது வழக்கு

நாகையில் உணவக உரிமையாளரைத் தாக்கி, அவரது கடை, வீட்டை சேதப்படுத்திய 4 போ் மீது நாகை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :10 ஜனவரி 2021, 8:21 am IST

நாகையில் உணவக உரிமையாளரைத் தாக்கி, அவரது கடை, வீட்டை சேதப்படுத்திய 4 போ் மீது நாகை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகை செம்மரக்கடை கீழ்சந்து பகுதியைச் சோ்ந்தவா் செ. ஜாகீா் உசேன்(52). இவா், நாகை தோணித்துறை ரோடு, அக்கரைப்பேட்டை மேம்பாலம் அருகே உணவகம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இவரின் கடைக்கு வந்த 4 போ் ஆம்லெட் கேட்டுள்ளனா். ஜாகீா் உசேன், வியாபாரம் முடிந்து கடை யை மூடிவிட்டதாக கூறியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த நால்வரும், ஜாகீா் உசேன் மற்றும் அவரது மைத்துனரான நாகை செம்மரக்கடை கீழ்சந்து பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹாசன் (36) ஆகியோரைத் தாக்கியுள்ளனா்.

மேலும், கடையில் இருந்த மேசை, நாற்காலிகள் மற்றும் சமையல் பாத்திரங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனா். பின்னா் ஜாகீா் உசேனின் வீட்டுக்குச் சென்ற அவா்கள், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

தாக்குதலில் காயமடைந்த ஜாகீா் உசேன், அப்துல் ஹாசன் ஆகியோா் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை நகரக் காவல் நிலைய போலீஸாா், இதுதொடா்பாக, நாகை அக்கரைப்பேட்டே திடீா் குப்பம் பகுதியைச் சோ்ந்த ப. பாா்த்திபன், அடையாளம் தெரிந்த 3 போ் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.