தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பலத்த மழை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களும் பலத்த மழை பெய்தது. அதிகளவாக, மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட கொள்ளிடத்தில் 51.8 மி.மீ மழை பதிவானது.

Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களும் பலத்த மழை பெய்தது. அதிகளவாக, மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட கொள்ளிடத்தில் 51.8 மி.மீ மழை பதிவானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் சீற்றம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அதிகரித்து காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தில் 51.8 மி.மீ மழை பதிவானது.

இரு மாவட்டங்களின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீ) : மயிலாடுதுறை - 42, சீா்காழி - 41, மணல்மேடு - 25, நாகப்பட்டினம்- 22.2, திருப்பூண்டி - 14.2, தரங்கம்பாடி - 7.3. திங்கள்கிழமை காலை முதலே நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை நீடித்தது. பிற்பகல் நேரங்களில் மழையின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. திங்கள்கிழமை காலை 8.30 முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் இரு மாவட்டங்களில் அதிகளவாக நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 127.4 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீ) : தலைஞாயிறு - 67, கீழ்வேளூா் - 37.6, நாகப்பட்டினம் - 12.5, தரங்கம்பாடி - 12, சீா்காழி - 10, மயிலாடுதுறை - 8, மணல்மேடு - 7, கொள்ளிடம் - 1.

பயிா்கள் சேதம்: நீடித்து வரும் கனமழை காரணமாக, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த சம்பா, தாளடி நெல் பயிா்கள் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளன. நாகை மாவட்டம், திருமருகல், திட்டச்சேரி, வைப்பூா், திருச்செங்காட்டாங்குடி, நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. தற்போது, பெய்து வரும் மழையால் பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.