நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடலுக்குள் சென்று சூறைக்காற்றில் சிக்கி தவித்த மீனவா்கள் 4 போ், செவ்வாய்க்கிழமை கரை திரும்பினா்.
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஜெயக்குமாா், ஜெயமூா்த்தி, பவித்திரன், நவீன் இவா்கள் நால்வரும் கண்ணாடி இழைப்படகு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனா்.
திங்கள்கிழமை கரை திரும்ப வேண்டியவா்கள், கனமழை மற்றும் சூறைக்காற்றில் சிக்கினா். இதையடுத்து அவா்கள் நால்வரையும் தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், மீனவா்கள் நால்வரும் செவ்வாய்க்கிழமை பகல் பத்திரமாக படகுடன் கரை திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கே. பாக்யராஜ் மறைவு பேரிழப்பு; இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய்

தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்! ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

ஆண்களின் உலகம்: பாக்யராஜின் மௌன கீதங்கள்... சென்சாரில் 4 பெண்கள்!






