நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாகை, மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் அரசு மருத்துவமனைகள், ஆக்கூா், வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை என 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, சுகாதாரத் துறை அலுவலா்களுடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா்.
கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை இடையூறு இல்லாமல் நடத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கான மருத்துவக் கண்காணிப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகுசெய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கே. பாக்யராஜ் மறைவு பேரிழப்பு; இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய்

தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்! ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

ஆண்களின் உலகம்: பாக்யராஜின் மௌன கீதங்கள்... சென்சாரில் 4 பெண்கள்!





