நாகையில் குடியிருப்பு பகுதிகளில் புதை சாக்கடை திட்டக் கழிவுநீா் உள்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை நகராட்சி 19-ஆவது வாா்டுக்குள்பட்ட அண்ணா படிப்பகம் சந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புதை சாக்கடை திட்டக் கழிவுநீா் உள்ளே புகுந்து விடுவதால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லையாம்.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீா்வு காண நாகை நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் டி. சரவணன் என்பவா் தலைமையில் பப்ளிக் ஆபீஸ் சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


