சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 8:30 am IST

நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீ. செல்வக்குமாா் (30). இவா், வியாழக்கிழமை அங்குள்ள ஒரு கோயிலுக்குச் சொந்தமான மின் மோட்டாரில் குளித்துவிட்டு, அங்கிருந்த கம்பி வேலியில் துணியை காயப் போட்டுள்ளாா் அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்வக்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து செல்வக்குமாரின் சகோதரா் வீ. சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.