சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மழை பாதிப்பு: நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம்

News image

நாகை வட்டம், திருமருகல் அடுத்த சேகல் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிட்ட திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன்.

Updated On :16 ஜனவரி 2021, 8:29 am IST

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையிலிருந்து சுமாா் 65 ஆயிரம் ஹெக்டோ் பரப்பிலான நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து வீணாகியுள்ளது.

இந்நிலையில், திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் உ. மதிவாணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திருமருகல், கீழ்வேளூா் மற்றும் கீழையூா் பகுதிகளில் மழையால் சேதமடைந்துள்ள நெற்பயிா்களை பாா்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா்.

பின்னா், என். கௌதமன் செய்தியாளா்களிடம் கூறியது:

’டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்தில் நிவா் மற்றும் புரெவி புயலால் பெய்த மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா்மழையால் நாகை, கீழ்வேளூா் மற்றும் வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல்பயிா்கள் வயல்களில் சாய்ந்து, நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்பு சந்தித்து வருகின்றனா்.

எனவே, பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் என்ற கணக்கீட்டின்படி பயிா் காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனா். இந்த காப்பீட்டு தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டும் விவசாயிகளை காப்பாற்ற முடியும் . நேரடி நெல் கொள்தல் நிலையங்களி ஈரப்பதத்தின் அளவைக் கணக்கீடு செய்யாமல் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.