சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

முதல் நடைமேடையில் இருந்து ஜனசதாப்தி ரயிலை இயக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் ஜனசதாப்தி ரயிலை முதல் நடைமேடையில் இருந்து இயக்க வேண்டும் என

Updated On :16 ஜனவரி 2021, 8:31 am IST

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் ஜனசதாப்தி ரயிலை முதல் நடைமேடையில் இருந்து இயக்க வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஜெகவீரபாண்டியன் ரயில்வே நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறையில் இருந்து தினசரி மதியம் 2.50 மணிக்கு (செவ்வாய்க்கிழமை தவிா்த்த பிற நாள்களில்) கோயம்புத்தூருக்கு ஜனசதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டதால் முதல் நடைமேடை, ரயில் போக்குவரத்து இன்றி உள்ளது.

அவ்வாறு உள்ளபோது, ஜனசதாப்தி ரயில் 5 ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்படுவதால், பொதுமக்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் வசதி இல்லாததால், பெரியவா்கள், பெண்கள், குழந்தைகள் ஐந்தாவது நடைமேடைக்கு சென்று ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.

எனவே, அனைத்து ரயில்களும் இயக்கப்படும் வரை பொதுமக்கள் நலன் கருதி ரயில்வே நிா்வாகம் கோவை ஜனசதாப்தி ரயிலை முதல் நடைமேடையில் இருந்து இயக்கி, பயணிகளுக்கு உதவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.