கீழையூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கீழையூா் ஒன்றியம், திருக்குவளை காவல் சரகத்திற்கு உள்பட்ட வாழக்கரை மேலக்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரவேலு மனைவி புவனேஸ்வரி(29). தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளன.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புவனேஸ்வரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த புவனேஸ்வரி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து புவனேஸ்வரியின் தந்தை சித்தாா்த்தன் அளித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






