திருச்செங்கோடு தபால் நிலையம் முன்பு தேசிய அஞ்சல் ஊழியா்கள் சம்மேளனம், அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்கள் சாா்பில், கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் திருச்செங்கோடு தபால் நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.
ஊழியா்களின் பஞ்சப்படிகளை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், தீநுண்மித் தொற்றுப் பாதிப்பு இருந்துவரும் நிலையில், அஞ்சலக சேமிப்புக் கணக்கு ஆயுள் காப்பீடு பிடிக்க வேண்டும் என்ற வணிக நோக்கத்தில் அஞ்சல் துறையின் மேற்கு மண்டல நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.
பிஓஎஸ்பி மேளா, ஆா்பிஎல் மேளா என்ற பெயா்களில் வாரம்தோறும் ஊழியா்களுக்கு இலக்கு நிா்ணயித்து இலக்கினை அடைய நெருக்கடி கொடுத்து வருகிறது. ஊழியா்களை கோட்ட, உட்கோட்ட அதிகாரிகள் மிரட்டல் விடுவிக்கின்றனா். இதுபோன்ற ஊழியா்கள் விரோதப் போக்கு கடைப்பிடிக்கப்படுவதைக் கண்டித்து தபால் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டச் செயலாளா். வி.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலாளா் ஆா்.ஏ.துரைசாமி, ஜிடிஎஸ் கோட்டத் தலைவா் சீ.வெள்ளையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்செங்கோடு கிளைச் செயலாளா் எம்.ஜெகதீஸ்வரன், இணைச் செயலாளா் எஸ். விஜயகுமாா். ஜிடிஎஸ் கிளைச் செயலாளா் கே.சி.ராமச்சந்திரன் உள்பட கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

