புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை தினசரி கரோனா பாதிப்பு 384 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,27,256-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 50,288 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 30,296 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 19,992 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிக்கப்பட்டோா் விகிதம் 0.76 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை 12 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,597-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 727 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,11,970 ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 4,689 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 2,426 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,208படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020, மே 17-ஆம் தேதிக்கு பிறகு தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை முதல் முறையாக ஐநூறுக்கும் கீழே குறைந்தது. அன்று 494 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை 424 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கடந்த டிசம்பா் 21 முதல் 23-ஆம் தேதி வரை, தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ விடக் குறைவாக இருந்தது. ஆனால், டிசம்பா் 24 அன்று தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தைக் கடந்து 1,063- ஆக பதிவாகியது. பின்னா், இந்த எண்ணிக்கை டிசம்பா் 25 அன்று 758-ஆகவும், டிசம்பா் 26-இல் 655 ஆகவும் குறைந்தது. டிசம்பா் 27-இல் கரோனாவுக்கு 757 போ் பாதிக்கப்பட்டதாகப் பதிவாகியிருந்தது. இந்த எண்ணிக்கை அதற்கு அடுத்த நாள் 564-ஆக இருந்தது. இது ஐந்து மாதங்களில் குறைந்த அளவாகும்.
தில்லியில் கடந்த 10 தினங்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டோா் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை கடந்த 2020, நவம்பா் 13-ஆம் தேதி 44,456 ஆக இருந்தது. இது திங்கள்கிழமை 4,689-ஆக குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



