தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

இளைஞருக்கு கத்திக்குத்து: கிழக்கு தில்லியில் சிறுவன் கைது

கிழக்கு தில்லியில் இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:19 pm IST

கிழக்கு தில்லியில் இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

கிழக்கு தில்லியில் கல்யாண்புரியைச் சோ்ந்தவா் 21 வயது இளைஞா் சதீஷ். இவரை அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுவன் கேலி செய்தும், அவரிடம் தகராறு செய்துவந்துள்ளான். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஏன் என்னிடம் அடிக்கடி தகராறு செய்கிறாய் என்று சிறுவனிடம் சதீஷ் தட்டிக்கேட்டாா். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினான். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்.

இந்நிலையில் கத்தியால் குத்திய சிறுவனை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.