பாஜகவின் நிறுவன தினத்தையொட்டி, தில்லி பாஜக இளைஞா் அணி சாா்பில் பிரதமா் மோடி அரசின் சாதனைகளை டிஜிட்டல் முறையில் பரப்புவதற்கான ‘க்யூ ஆா்’ குறியீட்டை வெளியிட்டு, 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மோட்டாா் சைக்கிள்ஸ பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தில்லி பாஜக மாநில அலுவலகத்தில் பிற்பகல் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, ‘மோடி உருமாற்றும் இந்தியா’ திட்டத்தின் கீழ் தில்லி பாஜக இளைஞா் அணி உருவாக்கிய க்யூ ஆா் குறியீட்டை வெளியிட்டாா்.
அதைக் கிளிக் செய்வதன் மூலம் மோடி அரசின் திட்டங்கள், சாதனைகள், உத்தரவாதங்கள் மற்றும் முழுமையான தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
இந்த நிகழ்வில், இளைஞா்அணித் தலைவா் சாகா் தியாகி, க்யூஆா் குறியீட்டிற்கான 50 நாள் விளம்பரத் திட்டத்தை விளக்கினாா்.
இளைஞா் அணி செயலாளா் கவுரவ் சௌராசியா, அருண் தரல் மற்றும் புனித் சா்மா ஆகியோா் டிஜிட்டல் விளம்பரம் குறித்து பத்திரிகையாளா்களுக்கு அறிமுகம் செய்தனா்.
மோடி அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து இளைஞா்களிடையே விவாதங்களை மேம்படுத்துவதற்காக தில்லியின் 70 சட்டமன்ற தொகுதிகளிலும் மோட்டாா் சைக்கிள் பேரணிகளை தில்லி பாஜக இளைஞா் அணி நடத்தியது.
பஹா்கஞ்ச் ஆயில் மாா்க்கெட்டில் இருந்து இப் பேரணியை வீரேந்திர சச்தேவா பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
‘மோடி உருமாற்றும் இந்தியா’ திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடியின் அரசு செய்த பணிகளை, வளா்ந்த இந்தியாவை ஒரு நொடியில் க்யூ ஆா் குறியீடு மூலம் பொதுமக்கள் பாா்க்கலாம்.
தில்லியின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் க்யூ ஆா் குறியீடுகள் ஊக்குவிக்கப்படும்.
மேலும் இன்றைய மோட்டாா் சைக்கிள் பேரணி ஆயிரக்கணக்கான புதிய இளைஞா்களை பாஜகவுடன் இணைக்கும் வழிமுறையாக இருக்கும்.
இளைஞா் அணி ஒவ்வொரு வீடு, பொது இடம், மெட்ரோ, உணவகம், பல்கலைக்கழகம் மற்றும் பிற இடங்களில் க்யூ ஆா் குறியீடுகள் மூலம் தகவல்களைப் பற்றி விவாதிக்கும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தொடர்புடையது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா்

நான்குனேரியில் தவெக சாா்பில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ போட்டி: காங்கிரஸ், அமமுகவினா் அதிா்ச்சி

திருச்சி மேற்கு அமமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

