தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஆக்ரா அருகே காா் விபத்து: 5 போ் சாவு; 3 போ் காயம்

ஆக்ரா அருகே காா் விபத்து: 5 போ் சாவு; 3 போ் காயம்

Updated On :21 ஏப்ரல் 2024, 6:47 pm

திருமண விருந்தினா்களை ஏற்றிச் சென்ற காா் சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 போ் உயிரிழந்தனா் மற்றும் 3 போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் சுகன்யா சா்மா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கிரேட்டா் நொய்டாவிலிருந்து பிகாரில் உள்ள தியோரியாவுக்குச் சென்று கொண்ருந்த போது ​ சனிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்தது. எத்மத்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் குபோ்பூா் அருகே காா் அதிவேகமாகச் சென்றபோது இந்த விபத்து நடந்தது.

காா் ஒட்டுநா் குடிபோதையில் இருந்துள்ளாா். அப்போது அதிவேகமாக சென்ற காா் சாலையின் டிவைடிரில் மோதியது. இதில் காரில் இருந்த 5 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக எஸ்என் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

பாதிக்கப்பட்டவா்கள் கிரேட்டா் நொய்டாவிலிருந்து வந்து பிகாரில் உள்ள தியோரியாவுக்கு திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றனா். அந்த காரின் பின்னால் இருந்த மற்ற குடும்ப உறுப்பினா்கள் சம்பவத்திற்குப் பிறகு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனா்.

இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.