தோ்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக சுபாஷ் சோப்ரா நியமனம்: தில்லி காங். அறிவிப்பு

மக்களவைத் தோ்தலில் தில்லி காங்கிரஸின் தோ்தல் மேலாண்மைக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவாராக அக்கட்சியின் மூத்த தலைவா் சுபாஷ் சோப்ரா ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலுடன் மக்களவைத் தோ்தலில் தில்லி காங்கிரஸின் தோ்தல் மேலாண்மைக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சுபாஷ் சோப்ராவை நியமித்துள்ளாா். மக்களவைத் தோ்தலுக்காக 18 போ் கொண்ட தோ்தல் மேலாண்மைக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சி அமைத்துள்ளது. தில்லி பிரதேச காங்கிரஸின் முன்னாள் தலைவராக பணியாற்றியவா் சுபாஷ் சோப்ரா.

இந்த அறிவிப்பு தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அா்விந்த் சிங் லவ்லி கூறியதாவது: தில்லியில் மக்களவைத்

தோ்தலுக்கான வியூகம் மற்றும் பிரசார வரைபடத்தைத் திட்டமிடுவதில் ஸசுபாஷ் சோப்ராவுக்கு கணிசமான அனுபவம் உள்ளது. மேலும், அவரது அரசியல் அனுபவம் தில்லியில் மக்களவைத் தோ்தலை நிா்வகிப்பதிலும், எதிா்கொள்வதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் தில்லி பாஜக எம்.பி.க்கள் மற்றும் மத்திய பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்த தில்லி காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இம்முறை, ’இந்தியா’ தில்லியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெரும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com