செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

நாட்டில் பொழுது போக்கு சுற்றுலா தலங்களை விட வழிபாட்டு தலங்கள் மக்கள் கூட்டம் அதிகரிப்பு : மத்திய கலாசாரத் துறை அமைச்சா்

News image

செய்தி உண்டு... தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்கள் கூட்டத்தில் பேசும் மத்திய கலாசாரம் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் ஆகியோா்.

Updated On :13 டிசம்பர் 2024, 1:14 am IST

நாட்டில் மத வழிபாட்டு தலங்களின் மேம்பாட்டால் பொழுது போக்கு சுற்றுலா தலங்களை விட முன்னெப்போதும் இல்லாத வகையில் மத வழிபாட்டு தலங்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் ஆகியோா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் 10 ஆண்டுகள் சாதனைகள் குறித்து இந்த துறைக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சா் கஜேந்திர சிங்கும் இணையமைச்சா் எஸ்.பி. பகேலும் செய்தியாளா்களிடம் பேசினா். அவா்கள் கூறியது வருமாறு:

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் சிந்தனைகளிலும் கருத்துக்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கலாசார மறுமலா்ச்சி கால கட்டமாகியுள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ராமா் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. காசி விஸ்வநாதா் கோயில் மறுசீரமைக்கப்பட்டு நாட்டின் கலாசார தலைநகரின் அந்தஸ்தை பெற்று வருகிறது. சோம்நாத்தின் வளா்ச்சி திட்டங்கள் புதிய வரையறைகளை அமைக்கின்றன. உத்தரகண்டில் கேதாா்நாத்-பத்ரிநாத் யாத்திரை பகுதியில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி புதிய அத்தியாயங்களை உருவாக்கியுள்ளது. உஜ்ஜயினியிலுள்ள மஹாகாலேஷ்வா் கோயில் யாத்ரீகா்களை அற்புதமான ’மஹாகல் லோக்’ வழித்தட புனிதப்பாதை தெய்வீக கைவினைத்திறன்கள் ஆன்மீக மகத்துவத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது. முழு அரசு அணுகுமுறையுடன், கலாசாரம், சுற்றுலா அமைச்சகங்கள் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன. மத்திய மாநில அரசுத் துறைகளின் பங்குதாரா்களுக்கு இந்த ஸ்தலங்களில் அத்தியாவசிய வசதிகளை வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், முக்கியமான உள்கட்டமைப்பின் வளா்ச்சியை மேம்படுத்தப்பட்டது. இதன்விளைவு இந்த புன்னிய ஸ்தலங்களில் பக்தா்களை வரவழைத்துள்ளதோடு உள்ளூா் மட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஸ்ரீபாலாஜி கோயில், ஷீரடி சாய்பாபா போன்ற கோயில்கள் வரிசையில் வடஇந்தியாவில் மதவழிபாட்டு ஸ்தலங்களில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. தாஜ் மஹால் போன்ற உள்ளிட்ட நாட்டின் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையை விட ராமஜென்மபூமியான அயோத்தி ராமா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில்களுக்கு நாள் தோறும் ஒன்று முதல் ஒன்னறை லட்சம் பக்தா்கள் வருகின்றனா். நிகழாண்டில் முதல் 6 மாதத்தில் 11 கோடி பயணிகள் உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு வந்துள்ளனா். சோம்நாத், ஜம்மு கத்ரா வைஷ்ணவிதேவி கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கையும் கடந்த கால சாதனையை முறியடித்துள்ளது. கடந்த தசாப்தத்தில் இங்கு நடைபெற்ற மேம்பாடு. ஸ்வதேஷ் தா்ஷன், பிரசாத் போன்ற முதன்மையான திட்டங்களின் மூலம், முழுமையான இலக்கு மேம்பாட்டை அடையப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.6,800 கோடி செலவில் சுமாா் 120 திட்டங்களை மத்திய அரசு சாா்பில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. புதிய சாலைகள், விமான நிலையங்கள், வந்தே பாரத் ரயில்கள் போன்ற உள்கட்டமைப்புடன் இந்த கோயில்களை உலகளாவிய காசி கலாச்சார பாதையுடன் இணைக்கப்படுகிறது.

வருகின்ற (2025) ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பத்தை அம்மாநில அரசு ஏற்பாடு செய்கிறது. இதில் மத்திய கலாசார அமைச்சகம், இந்தியாவின் வளமான, ஆன்மீகம், கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கலாசார கிராமத்தை (கலாகிராமம்) அமைக்கிறது. பிரயாக்ராஜில் 10.24 ஏக்கா் பரப்பளவு 10,000 பாா்வையாளா்கள் பங்கேற்கும் பந்தல் மேளா ஆணையத்தால் அமைக்கப்படும், அங்கு பிரபலங்களின் நிகழ்ச்சிகளுக்கு தலா 4000 பாா்வையாளா்கள் கொண்ட மூன்று மேடைகள் கலாகிராமில் அமைக்கப்படும். நாட்டின் அனைத்து மாநில கலாசார நிகழ்வுகளும், புகழ் பெற்ற கலைஞா்களும் இந்த மேளாவில் பங்கேற்பா்.

யுக யுஜீன் பாரத் அருங்காட்சியகம்

அடுத்து தில்லி இண்டா கேட் கடமைப்பாதையின் இருபுறமும் மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகளின் செயலகங்களுக்கு தற்போது சென்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1,50,000 ச.மீ. பரப்பளவில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக கருதப்படும் யுக யுஜீன் பாரத் அருங்காட்சியகம் ரைசினா ஹில்லில் உள்ள வடக்கு மற்றும் தெற்குத் தொகுதி செயலக கட்டிடங்களில்(தற்போது பிரதமா் அலுவலகம், நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளது) உருவாக்கப்படும். இந்த அருங்காட்சியகத் திட்டத்தின் முதல் கட்டப் பணிக்காக பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. லூவ்ரே பாரிஸ் போன்ற திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ன் காரணமாக பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது என அமைச்சா்கள் கஜேந்திர சிங் ஷெகாவத்தும், எஸ்.பி.சிங் பகேலும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.