ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

என்எச்ஆா்சி தலைவராக நியமனம்: நீதிபதி ராமசுப்ரமணியனுக்கு தில்லி தமிழ் சங்கம் வாழ்த்து

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியனுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் வழக்குரைஞா்கள் சங்கம் வாழ்த்து

News image
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியன்
Updated On :23 டிசம்பர் 2024, 9:17 pm

Din

புது தில்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியனுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் வழக்குரைஞா்கள் சங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா்

திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்.சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள்

நீதிபதி வி. ராமசுப்ரமணியனுக்கு தில்லி வாழ் தமிழா்களின் சாா்பிலும், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பிலும் வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியனுக்கு தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலா் -முனைவா் ராம் சங்கரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.