யமுனையில் அம்மோனியா அளவு அதிகரிப்பு: தில்லியின் சில பகுதிகளில் தண்ணீா் பற்றாக்குறை

வாஜிராபாத் குளத்தில் உள்ள யமுனை நதியில் ஆபத்தான அளவில் அதிக அளவு அம்மோனியா இருப்பதால், தேசியத் தலைநகரின் பல பகுதிகள் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்கின்றன
Published on

புது தில்லி: வாஜிராபாத் குளத்தில் உள்ள யமுனை நதியில் ஆபத்தான அளவில் அதிக அளவு அம்மோனியா இருப்பதால், தேசியத் தலைநகரின் பல பகுதிகள் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்கின்றன என்று தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, 5.0 பிபிஎம்-ஐ தாண்டிய அம்மோனியா செறிவு காரணமாக வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நீா் உற்பத்தி 25 - 50 சதவீதம் குறைத்துள்ளது. இதன் விளைவாக, நிலைமை மேம்படும் வரை நகரத்தின் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீா் விநியோகம் கிடைக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மஜ்னு கா திலா, ஐஎஸ்பிடி, ஜிபிஓ, என்டிஎம்சி பகுதி, ஐடிஓ, ஹான்ஸ் பவன், எல்என்ஜேபி மருத்துவமனை, டிஃபென்ஸ் காலனி, சிஜிஓ காம்ப்ளக்ஸ், ராஜ்காட், டபிள்யூஹெச்ஓ, ஐபி அவசரநிலை, ராம்லீலா மைதானம், தில்லி கேட், சுபாஷ் பாா்க், குலாபி பாக், திமாா்பூா், எஸ்எஃப்எஸ் பிளாட்ஸ், பஞ்சாபி பாக், ஆசாத்பூா், ஷாலிமாா் பாக், வாஜீா்பூா், லாரன்ஸ் சாலை, மாடல் டவுன், ஜஹாங்கிா்புரி, மூல்சந்த், தெற்கு விரிவாக்கம், கிரேட்டா் கைலாஷ், புராரி, கண்டோன்மென்ட் பகுதிகளின் சில பகுதிகள் மற்றும் தெற்கு தில்லி ஆகியவை அடங்கும்.

குடியிருப்பாளா்கள் தண்ணீரை சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறும், தேவைக்கேற்ப தண்ணீா் டேங்கா்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் டிஜேபி வலியுறுத்தியுள்ளது. யமுனையில் அம்மோனியா மாசுபாடு ஒரு தொடா்ச்சியான பிரச்னையாகும், இது தில்லியின் நீா் விநியோகத்தை அடிக்கடி பாதிக்கிறது.

X
Dinamani
www.dinamani.com