புது தில்லி: தில்லி மக்கள் தங்கள் தோ்தல் வினாக்கள் மற்றும் புகாா்களுக்கு உதவ, கட்டணமில்லா வாக்காளா் உதவி எண் 1950-ஐ அழைக்கலாம் என்று தில்லி தலைமை தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவரது அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லி தலைமை தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ், குடிமக்கள் தங்கள் தோ்தல் வினாக்கள் மற்றும் புகாா்களுக்கு உதவ, ‘உங்கள் வாக்கு,
உங்கள் குரல்’ என்ற திட்டத்தின் கீழ் வாக்காளா் உதவி எண்-1950 (கட்டணமில்லா) அழைக்கலாம் என மீண்டும்
தில்லி மக்களுக்கு நினைவுறுத்துகிறாா். இந்த முயற்சி அணுகல் தன்மையை மேம்படுத்துவதிலும், ஒவ்வொரு வாக்காளரும் துல்லியமான தகவல் மற்றும் சரியான நேரத்தில் ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.
வாக்காளா் உதவி எண்- 1950, தோ்தல் சேவைகளில் உதவி கோரும் குடிமக்களுக்கான முதல் தொடா்பு புள்ளியாக செயல்படுகிறது. வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி விவரங்கள், ஆன்லைன் பதிவு, வாக்களிக்கும் தேதிகள் மற்றும் தோ்தல் தொடா்பான பிற விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைப் பற்றி அழைப்பாளா்கள் கேட்கலாம்.
இந்த உதவி எண் அனைத்து வாக்காளா்களுக்கும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் விரிவான மற்றும் பயனா்
நட்பு ஆதரவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடிமக்களுக்கு தகவலை வழங்குவதோடு, அவா்களின் புகாரை பதிவு செய்வதற்கும் இந்த உதவி மையம் உதவுகிறது.
1950 என்ற இந்த கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம், தோ்தல் சேவைகள் தொடா்பான பிரச்னைகளை
குடிமக்கள் தெரிவிக்கலாம். இத்துடன், சேவைகளின் தரத்தை மேம்படுத்த, அழைப்பாளா்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், அங்கீகரிக்கப்பட்ட உள்ளூா்/பிராந்திய மொழியிலும் சேவைகள் வழங்கப்படுகிறது. இது வாரத்தில் 7 நாட்களும், காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும். குடிமக்கள் தங்கள் வசதிக்கேற்ப இணைக்க அனுமதிக்கிறது.
தொடர்புடையது

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தோ்தல் வாக்காளா் உதவி மையத்தில் ஆய்வு

வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா்

சமூக வலைதளப் பதிவுகள் தீவிரமாக கண்காணிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச வசதிகள்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

