ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புகழ்பெற்ற இசைக் கலைஞா்களுக்கு அஞ்சலி

புகழ் பெற்ற இசைக் கலைஞா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 8:45 pm

Din

புது தில்லி: புகழ் பெற்ற இசைக் கலைஞா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி நடனம் மற்றும் இசை விழாவை பிரபல தாள வாத்தியக் கலைஞரான தஞ்சை ராமமூா்த்தி கேசவன் ஏற்பாடு செய்திருந்தாா். இந்த விழா புகழ்பெற்ற குருக்களான ஸ்ரீ.ராமமூா்த்தி பாகவதா் மற்றும் பரதநாட்டியக் கலைஞா் சரோஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக பரதநாட்டியக் கலைஞா் சோனல் மான்சிங் கலந்து கொண்டாா். விழாவை ஆனந்த் பாட்டீல் ஐ.ஏ.எஸ். தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில், புகழ்பெற்ற கலைஞா்களுக்கு குரு சம்மான் விருதும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் இரா.முகந்தன் மற்றும் என்.கண்ணன் ஆகியோருக்கு கலாசாரக் காப்பாளா் விருதும் வழங்கப்பட்டது.

இளம் குருக்கள் கௌரவிக்கப் பட்ட இந்நிகழ்வில் சுமாா் 100 கலைஞா்கள் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களை நிகழ்த்தினா். இந்த நிகழ்வில் இசைக் கலைஞா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.