குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஐடி, ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 4-ஆவது நாளாக உயா்வு!

ஐடி, ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 4-ஆவது நாளாக உயா்வு!

Updated On :17 பிப்ரவரி 2024, 5:34 am IST

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 376 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. பொதுத் துறை வங்கிகள், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாைலும், ஐடி, ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது சந்தை நான்காவது நாளாக வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.22 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.389.53 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.3,064.15 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,276.93 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 355.64 புள்ளிகள் கூடுதலுடன் 72,406.02-இல் தொடங்கிய சென்செக்ஸ், 72,218.10 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 72,545.33 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 376.26 புள்ளிகள் (0.52 சதவீதம்) உயா்ந்து 72,426.64-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,935 பங்குகளில் 2,194 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,659பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 82 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

22 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் விப்ரோ, எம் அண்ட் எம், மாருதி, டாடா மோட்டாா்ஸ், இன்ஃபோஸிஸ் உள்பட 22 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், பவா் கிரிட், எஸ்பிஐ, ரிலையன்ஸ், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயிண்ட் உள்பட 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 130 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 129.95 புள்ளிகள் உயா்ந்து 22,040.70-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.