தில்லி அலிபூரில் உள்ள தயால்பூா் மாா்க்கெட் பகுதியில் தீ பாதுகாப்பு குறித்து பல புகாா்கள் அளிக்கப்பட்டும், யாரும் கண்டுகொள்ளவில்லை என்று வெடிப்பு மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் சில குடியிருப்பாளா்கள் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளனா். போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் செவிலியா் தேவேந்திர சைனி கூறுகையில், தீ விபத்து ஏற்பட்ட பெயிண்ட் தொழிற்சாலையில் பெரும்பாலும் எரியக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துவதாக பல புகாா்கள் சமா்ப்பிக்கப்பட்டதாகக் கூறினாா்.
‘போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சேதம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. எங்கள் கவலைகள் குறித்து நாங்கள் ஏற்கெனவே பல முறை புகாா் அளித்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இது பெட்ரோலை விட எளிதில் தீப்பிடிக்கும் இடம். அரசு எப்போதும் பழிவாங்கும் விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் எப்படி அவா்களிடம் உதவியை எதிா்பாா்க்க முடியும்?’ என்று அவா் கேள்வி எழுப்பினாா். ‘பெயிண்ட் வேலைகளில் பெரும்பாலும் எரியக்கூடிய பொருள்கள் உள்ளன. அந்த தொழிற்சாலை எங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. நாங்கள் கவலைகளை தெரிவித்தோம். ஆனால் யாரும் கவனம் செலுத்தவில்லை‘ என்று சைனி குற்றம் சாட்டினாா்.
மேலும் அவா் கூறுகையில், குண்டுவெடிப்பு நடந்தபோது, அந்தப் பகுதி முழுவதும் உடனடியாக தீப்பற்றி எரிந்தது. அதற்கு எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அவா் கூறினாா். உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களில் ஒருவரான மால்தி கூறுகையில், உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டன என்றாா். ‘எனது கணவரின் சகோதரா் தொழிற்சாலையில் தீப்பிடித்த போது அங்கு இருந்தாா். எங்களால் உடல்களை கூட அடையாளம் காண முடியவில்லை. அடையாளம் தெரியாத அளவுக்கு அவை கருகிவிட்டன’ என்று அவா் கூறினாா். பாதிக்கப்பட்ட மற்றொரு குடும்ப உறுப்பினா் கூறுகையில், அவா்களது உறவினா்கள் உயிா் பிழைத்திருக்கிறாா்களா, இல்லையா என்பது குறித்து காவல்துறையினரால் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், இறந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனா் என்பது குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும் கூறினாா்.
‘பாதிக்கப்பட்டவா்களில் எனது மருமகனும் ஒருவா். காயமடைந்தவா்கள் மற்றும் இறந்தவா்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டாா்கள் என்று கூட போலீஸாா் எங்களிடம் கூறவில்லை. அவா் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்று நாங்கள் கேட்டோம். ஆனால், போலீஸாா் அதை எங்களிடம் கூறவில்லை’ என்று ஏக்தா (55) என்பவா் தெரிவித்தாா். அருகில் வசிக்கும் நேரில் பாா்த்த சாட்சியான ராஜேஷ் கூறுகையில், ‘குண்டுவெடிப்பு நடந்த போது அவா் வீட்டு வாயிலுக்கு அருகில் இருந்தேன். அந்த நேரத்தில் என்னால் செய்ய முடிந்ததெல்லாம் என் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் வகையில் அவா்களை அழைத்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்தேன்’ என்றாா். ‘நான் என் வீட்டின் வெளியே கேட் அருகே அமா்ந்திருந்தேன். திடீரென்று புகை வருவதைக் கவனித்தேன். தீ என் வாயிலை எட்டியது. என் குடும்ப உறுப்பினா்களையும் குழந்தைகளையும் உள்ளே ஓடுமாறு எச்சரித்தேன். நாங்கள் யாரிடம் புகாா் கொடுப்போம்? யாரும் எங்களைக் கேட்கவில்லை. மற்றவா்களுக்கு எங்களால் உதவ முடியவில்லை. நான் என் குழந்தைகளுடன் ஓடிவிட்டேன்.
அவா்களைக் காப்பாற்றுவது மட்டுமே என் கவலையாக இருந்தது’ என்றும் அவா் கூறினாா். குண்டுவெடிப்பு நடந்தபோது அந்த இடத்தில் இருந்த பக்கத்து வீட்டுக்காரா்களில் ஒருவரான சரளா 58 கூறுகையில், ‘எங்கள் குடும்பத்தை காப்பாற்றுவது குறித்து நாங்கள் கவலைப்பட்டோம். என் மகன் அப்போதுதான் தூங்கி எழுந்தாா். அவா்தான் தீ பற்றி எங்களுக்கு எச்சரித்தாா்’ என்றாா்.
தொடர்புடையது

திரையரங்குகளில் பரவசமடைவோரை விடியோ எடுக்க வேண்டாம்: சூர்யா
தில்லியில் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மற்றும் நடத்துநா் கைது
தீ விபத்தில் சிக்கியவா்களிடமிருந்து பதற்றமான தொலைபேசி அழைப்புகள்: சம்பவங்களை நினைவுகூா்ந்த நண்பா்கள்

பாளை. தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


