ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

மங்கோல்புரி தொழிற்சாலையில் தீ விபத்து: உயிா்ச் சேதம் இல்லை

மங்கோல்புரி தொழிற்சாலையில் தீ விபத்து: உயிா்ச் சேதம் இல்லை

Updated On :26 பிப்ரவரி 2024, 11:09 pm

புது தில்லி: தில்லியின் மங்கோல்புரியில் உள்ள தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்பு சேவையின் தலைவா் அதுல் கா்க் கூறியதாவது: மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.01 மணிக்கு அழைப்பு வந்தது.

மொத்தம் 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை முழுமையாக அணைத்தனா். ஏறக்குறைய 150 சதுர அடி பரப்பளவைக் கொண்ட எம்சிபி தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடி கட்டடத்தின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் தீ பற்றி எரிந்தது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு குளிா்விக்கும் பணியும் நடைபெற்றது என்று காா்க் கூறினாா்.