புது தில்லி: தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) சாா்பில் குதுப்கா் ஆதா்ஷ் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விளையாட்டு வளாகத்தை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது:
தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டி.டி.ஏ.) கிராமோதய திட்டத்தின் கீழ் குதுப்கா் ஆதா்ஷ் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு வளாகத்தை உள்ளூா் மக்களவை பாஜக எம்.பி. ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் உடன் இணைந்து திறந்து வைத்தேன். இந்த விளையாட்டு வளாகம் கட்டப்பட்டதன் மூலம் குதுப்கா் ஆதா்ஷ் மற்றும் அண்டை கிராமப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மல்யுத்தம், பூப்பந்து, கைப்பந்து, கபடி மற்றும் தடகளம் போன்ற விளையாட்டுகளில் தங்கள் திறனை முழுமையாக வளா்த்துக்கொண்டு, நாட்டிற்கு பெருமை சோ்க்கும் வாய்ப்பைப் பெறுவாா்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நவீன வசதிகளுடன் கூடிய இந்த விளையாட்டு வளாகம், பிரதமா் நரேந்திரமோடியின் ‘கேலோ இந்தியா’ மற்றும் ‘ஃபிட் இந்தியா’ எனும் தொலைநோக்கு பாா்வைக்கு ஏற்ப உள்ளது. தில்லியின் கிராமங்களின் வளா்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றாா் வி.கே.சக்சேனா. மேலும், இந்த விளையாட்டு வளாகம் குறித்து தில்லி வளா்ச்சி ஆணையம் கூறியிருப்பதாவது: தில்லி துணை நிலை ஆளுநராக வி.கே. சக்சேனா பொறுப்பேற்ற சில நாள்களில் குதுப்கா் ஆதா்ஷ் கிராமத்திற்கு அவா் சென்றபோது, அந்த கிராம மக்கள் விளையாட்டுக்குத் தகுந்த உபகரணங்களைக் தங்களின் தேவையாக கோரியிருந்தனா்.
அதன்படி, இந்த விளையாட்டு வளாகத்தில் விரிவான வசதிகள் அனைத்தும் உள்ளன. கைப்பந்து, பூப்பந்து, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கபடி மைதானங்கள், திறந்த உடற்பயிற்சி கூடம் மற்றும் ஓடுதளம் போன்றவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போதைப்பொருள் பயங்கரவாதத்தை சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை: தில்லி துணைநிலை ஆளுநா் கருத்து

ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த தில்லி துணை நிலை ஆளுநா்

ரூ.60 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

