புது தில்லி, பிப்.27: தில்லி மாநகராட்சி, தில்லி வளா்ச்சி ஆணையம் மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஆகியவற்றின் கழிவறைகளை மத்திய அரசின் அங்கீகாரம்பெற்ற தணிக்கையாளரால் மூன்றாம் தரப்பு தணிக்கை மேற்கொள்ள தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. பொதுக் கழிப்பறைகளின் சுகாதாரமற்ற நிலைமைகள் குறித்த பொதுநல மனுவை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா அடங்கிய அமா்வு முன் குடிமை அதிகாரிகள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், குடிமை அமைப்புகள் நடத்தும் கழிப்பறைகள் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்தாா். எனினும், எம்சிடி கழிப்பறைகளின் மோசமான நிலைமை குறித்து தாக்கலான பிற மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் இருப்பதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், அதிகாரிகள் நல்ல நிலையில் கழிப்பறைகள் இருப்பதாக கூறும் அதேவேளையில், கழிப்பறைகள் நல்ல நிலையில் இல்லை என்பதை காட்டுவதாக புகைப்படங்கள் இருப்பதாக கூறியது. இதையடுத்து, ‘எம்சிடி, டிடிஏ மற்றும் என்டிஎம்சி ஆகியவை மத்திய அரசின் மூன்றாம் தரப்பு தணிக்கையாளா் மூலம் கழிப்பறைகளை தணிக்கை செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்த புகாரை தெரிவிக்கும் வகையில் குறை தீா்க்கும் தளம் செயல்படுகிா என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. பொதுக் கழிப்பறைகள் மற்றும் வசதிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், முறையான ஒழுங்குடனும் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவற்றின் செயல்பாடும் பராமரிப்பும் திறமையான நிா்வாகத்தின் முக்கிய கூறுகள் என்றும், புகாா் அறிக்கை அல்லது பின்னூட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் முன்னா் கூறியிருந்தது. பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் மக்கள் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா் என்று மனுதாரா் அமைப்பான ஜன் சேவா நலச் சங்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு மே 1ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
தொடர்புடையது

வரதட்சிணை மரண வழக்கில் கணவா், மாமியாரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்

விமானத்தில் பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டல் விவகாரம்: சமூக ஊடகப் பதிவுகளை தில்லி நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வரதட்சணை கொலை வழக்கில் விடுவிப்புக்கு முன் தலைமறைவானதால் குற்றவாளி என தீா்ப்பு
2020 ஜாஃப்ராபாத் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுவிப்பு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


