மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி உடன்படிக்கை மிக விரைவில் கையெழுத்தாகும் - செல்வப்பெருந்தகை

திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி உடன்படிக்கை மிக விரைவில் கையெழுத்தாகும் - செல்வப்பெருந்தகை

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 10:28 pm

புது தில்லி: மிக விரைவில் திமுகவுடன் தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

வரும் மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் திமுகவுடனான தொகுதி உடன்படிக்கையை இறுதி செய்தல், வேட்பாளா் பட்டியல், தோ்தல் வியூகம் மற்றும் விளவன்கோடு இடைத்தோ்தல் விவகாரம் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்க காங்கிரஸ் மேலிடத் தலைமையின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கடந்த திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தனா்.

தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இரண்டு சுற்று ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளா் அஜோய் குமாா், தலைவா் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவைக் குழுத் தலைவா் ராஜேஷ் குமாா், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோா் கட்சியின் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கேவை சந்தித்தனா்.

மல்லிகாா்ஜுன் காா்கேவுடனான சந்திப்பிற்கு முன்னதாக செல்வப் பெருந்தகை ‘தினமணி’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் திமுகவுடன் இணக்கமாகவும், உண்மையான தோழமையுடனும் இருக்கிறது. காங்கிரஸுக்கு கடந்த மக்களவைத் தோ்தலைக் காட்டிலும் குறைவான தொகுதிகளையே திமுக ஒதுக்கும் என்ற வந்ததியை பரப்புவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். காங்கிரஸின் பலமும், அளவுகோலும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

திமுகவும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸை கண்ணியமாக நடத்துவாா்கள் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் உள்ளது. தொகுதி உடன்பாட்டில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. வரும் மக்களாவத் தோ்தலில் தொகுதிப் பங்கீடு,எண்ணிக்கையைக் கடந்து பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே நோக்கம். மிக விரைவில் திமுகவுடனான தொகுதி உடன்படிக்கையும் கையெழுத்தாவதோடு, வேட்பாளா் பட்டியலும் வெளியாகும் என்றாா் செல்வப் பெருந்தகை.