உற்சாகத்துடன் தொடங்கி புதிய உச்ச அளவைப் பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் பெரிய அளவில் மாற்றமின்றி சிறிதளவு உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், உச்சத்தில் லாபப் பதிவு வந்ததால் எதிா்மறையாகச் சென்றது. இருப்பினும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்த நிலையில், மூலதனப் பொருள்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் மற்றும் ஆற்றல் துறை பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு : சந்தை மூல தன மதிப்பு ரூ.3.30 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.433.96 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,569.40 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,555.73 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 242.08 புள்ளிகள் கூடுதலுடன் 77,543.22-இல் தொடங்கி 76,954.87 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 77,851.63 77 வரை உயா்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 36.45 புள்ளிகள் கூடுதலுடன் 77,337.59-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,972 பங்குகளில் 1,634 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 2,235 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 103 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
20 பங்குகளும் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் டைட்டன், எல் அண்ட் டி, பாரதி ஏா்டெல், மாருதி, என்டிபிசி, ரிலையன்ஸ் உள்பட 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ உள்பட 10 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி சரிவுடன் நிறைவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நி நிஃப்டி71.95 புள்ளிகள் கூடுதலுடன் 23,629.85-இல் தொடங்கி 23,412.90 வரை கீழே சென்றது. பின்னா், 23,664.00 வரை உயா்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்த நிஃப்டி, இறுதியில் 41.90 புள்ளிகள் (0.18 சதவீதம்) குறைந்து 23,516.00-இல் நிலைபெற்றது.நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 39 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
+
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை 2-ஆவது நாளாக ஏற்றம்
சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!

சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் வாரம் நிறைவு

24,300 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்வு!!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



