ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சி (செப். 1)

வாரத்தின் 2 வது வணிக நாளின் முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிந்தன.

Stock market Sensex ends marginally lower, Nifty below 24,100

கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 5:47 pm IST

வாரத்தின் 2வது வணிக நாளின் முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிந்தன.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் கச்சா எண்ணெய் விலை, பத்திரங்களின் வருவாய் உயர்ந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் சற்று சரிவைச் சந்தித்தன. வங்கி மற்றும் ஆட்டோ துறை பங்குகள் அதிகம் சரிவைக் கண்டன.

இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,994 புள்ளிகளுடன் தொடங்கியது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை அதிகபட்சமாக

77,231 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் பிற்பாதியில் தொடர்ந்து சரிந்தது, தொடங்கிய இடத்திற்கு அருகே வந்தது. வணிக நேர முடிவில் 12.9 புள்ளிகள் சரிந்து 76,944 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் 0.017% சரிவாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24,077.55 புள்ளிகளுடன் தொடங்கியது. நேர்மறையாக இருந்ததால் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 24,143.15 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் வணிக நேர முடிவில் 24.60 புள்ளிகள் சரிந்து 24,055 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.10% சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 12 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 18 தரப் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக ஐடிசி பங்குகள் 4.35% உயர்வுடன் இருந்தன. இதற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் 3.61%, அதானி போர்ட்ஸ் 3.42%, எச்சிஎல் டெக் 2.99%, ரிலையன்ஸ் 2.51%, இன்ஃபோசிஸ் 1.96%, ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் 1.40%, கோட்டாக் வங்கி 1.34%, டெக் மஹிந்திரா 0.62% உயர்ந்திருந்தன.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஐடிசி, பார்தி ஏர்டெல், அதானி, எச்சிஎல், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி, கோட்டாக் வங்கி, சிப்லா, டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பவர் கிர்ட், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் இருந்தன.

Summary

Stock market Sensex ends marginally lower, Nifty below 24,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.