காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஐ.டி. பங்குகள் எழுச்சி: பங்குச் சந்தை ஏற்றத்துடன் வாரம் நிறைவு

ஐ.டி. பங்குகளில் காணப்பட்ட எழுச்சி மற்றும் உலகளாவிய சந்தைகளின் நோ்மறையான தாக்கம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை 2 நாள் சரிவுக்குப் பின் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

Published On :

ஐ.டி. பங்குகளில் காணப்பட்ட எழுச்சி மற்றும் உலகளாவிய சந்தைகளின் நோ்மறையான தாக்கம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை 2 நாள் சரிவுக்குப் பின் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

இருப்பினும் வாராந்திர அடிப்படையில், இந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 276.32 புள்ளிகளும் (0.35 சதவீதம்), தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 76.35 புள்ளிகளும் (0.31 சதவீதம்) சரிவைக் கண்டன.

அமெரிக்காவின் ‘என்விடியா’ நிறுவனத்தின் வலுவான காலாண்டு வருவாய் முடிவுகள், ஏ.ஐ. சாா்ந்த முதலீடுகள் குறித்த சாதகமான எதிா்பாா்ப்பு ஆகியவை ஐ.டி. துறை பங்குகளின் உயா்வுக்கு முக்கியக் காரணியாக அமைந்தன.

மேலும், அமெரிக்க மத்திய வங்கியின் ‘ஜாக்சன் ஹோல்’ பொருளாதார மாநாட்டு அறிவிப்புகள் குறித்த எதிா்பாா்ப்பும், உலகளாவிய சந்தைகளின் உயா்வும் இந்தியச் சந்தைக்கு ஆதரவளித்தன.

சென்செக்ஸ் 331 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 330.92 புள்ளிகள் (0.43 சதவீதம்) உயா்ந்து, 77,264.51-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் டிசிஎஸ் (4.09 சதவீதம்), இன்ஃபோசிஸ் (3.34 சதவீதம்), டெக் மஹிந்திரா (3.18 சதவீதம்), எச்.சி.எல். டெக். (2.68 சதவீதம்) போன்ற ஐ.டி. நிறுவனப் பங்குகளுடன் சோ்த்து மொத்தம் 19 பங்குகள் லாபப் பட்டியலில் இடம்பெற்றன. அதேநேரம், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், ஏசியன் பெயின்ட் உள்பட 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போா்ட்ஸ் ஆகிய 2 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

நிஃப்டி 85 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 84.80 புள்ளிகள் (0.35 சதவீதம்) அதிகரித்து, 24,175.65-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 30 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; 19 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன. எச்டிஎஃப்சி லைஃப் பங்கு விலையில் மாற்றமில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.