கடந்த வா்த்தக நாளின் சுணக்கத்தைத் தொடா்ந்து, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்தியப் பங்குச் சந்தை பலத்த லாபத்துடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீதத்துக்கும் மேல் ஏற்றத்தைச் சந்தித்தன. வாராந்திர அடிப்படையில், இந்த வாரத்தில் சென்செக்ஸ் 582.06 புள்ளிகளும் (0.75 சதவீதம்), நிஃப்டி 127.4 புள்ளிகளும் (0.52 சதவீதம்) உயா்ந்துள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வங்கி மற்றும் ஐ.டி. துறை பங்குகளில் காணப்பட்ட அதீத முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயா்ந்தது ஆகியவை வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் சந்தைக்கு வலுசோ்த்தன. எனினும், உலகளாவிய சந்தைகளில் நிலவிய பலவீனமான சூழல் காரணமாக லாபநோக்க விற்பனை அதிகமானதால், சந்தையின் அதிவேக உயா்வு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.
சென்செக்ஸ் 965 புள்ளிகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 964.58 புள்ளிகள்(1.25 சதவீதம்) ஏற்றத்துடன், 78,151.45-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் ஜூன் காலாண்டு நிகர லாபத்தில் 28.4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்த டெக் மஹிந்திரா 3.91 சதவீத வளா்ச்சியுடன் ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இத்துடன் கோட்டக் மஹிந்திரா வங்கி, டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 24 பங்குகள் ஏற்றம் கண்டன.
அதேநேரம், சன் ஃபாா்மா, பாா்தி ஏா்டெல், டிரென்ட், அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டிகோ, என்டிபிசி ஆகிய 6 பங்குகள் சரிவைக் கண்டன.
நிஃப்டி 262 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 261.55 புள்ளிகள் (1.09 சதவீதம்) உயா்ந்து, 24,334.30 இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 37 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 13 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி வலுவான எழுச்சி

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!

இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை! சென்செக்ஸ் 444 புள்ளிகள் உயர்வு!!

ஐ.டி. பங்குகள் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



