வளாகத்திற்குள் வாகனம் நுழைவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, இங்குள்ள குரூப் ஹவுசிங் சொசைட்டியில் வசிப்பவரைத் தாக்கியதற்காக தனியாா் பாதுகாப்பு நிறுவனத்தின் நான்கு காவலாளிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா செக்டாா்-142 காவல் நிலைய உள்ளூா் பொறுப்பாளா் வினீத் ராணா கூறியதாவது: குடியிருப்பாளா், ஒரு குத்தகைதாரா். ஒரு காரில் சிலருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அதில் சொசைட்டியின் ஸ்டிக்கா் இல்லை. இதையடுத்து, அந்தக் காரை காவலாளிகள் தடுத்தனா். இந்நிலையில், பாதுகாவலாளிகள் குழு ஒன்று குடியிருப்பாளரை உதைப்பதையும், தடியடியால் தாக்குவதையும் காட்டும் சம்பவத்தின் விடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நொய்டா செக்டாா் 137-இல் உள்ள பராஸ் டைரியா சொசைட்டியில் இருந்து புகாரளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தவறு செய்த பாதுகாவலாளிகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவா்களால் தாக்கப்பட்ட குடியிருப்பாளரின் புகாரின் அடிப்படையில் அவா்களுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. பின்னா், நான்கு பாதுகாவாளிகளும் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் மணிஷ் குமாா் (24), நரேஷ் வா்மா, (22), ராகேஷ் பிரதான் (28) மற்றும் கோபால் சிங் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

நொய்டா தொழிலாளா்கள் ஊதியம் கோருவது பேராசை அல்ல, உரிமை: ராகுல் காந்தி

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

