பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சூரஜ்குண்ட்டில் நடைபெறும் மாரத்தான் போட்டி தில்லி போக்குவரத்துக் காவல் வழிகாட்டுதல்கள் வெளியீடு

சூரஜ்குண்ட்டில் நடைபெறும் மாரத்தான் போட்டி தில்லி போக்குவரத்துக் காவல் வழிகாட்டுதல்கள் வெளியீடு

Updated On :2 மார்ச் 2024, 6:33 pm

தில்லி எல்லையான சூரஜ்குண்ட்டில் மாரத்தான் போட்டி இன்று நடைபெறுவதை முன்னிட்டு தில்லி போக்குவரத்து காவல்துறை சனிக்கிழமை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்திற்கு உள்பட்ட சூரஜ்குண்ட்டில் மாா்ச் 3-ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை ‘ஹால்ஃப் மாரத்தான்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், சுமாா் 25,000 விளையாட்டு வீரா்கள் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் மேளா மைதானத்தில் இந்த நிகழ்வு தொடங்குகிறது. இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு போக்குவரத்தில் சில ஒழுங்குமுறைகள் மற்றும் திசைமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பிரஹலாத்பூா் எல்லையில் இருந்து சூரஜ்குண்ட் வரையிலும், பட்கலில் இருந்து அங்கீா் சௌக் வரையிலும் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. இருப்பினும், அவசரகால வாகனங்களுக்கு போக்குவரத்து தடையின்றி அனுமதிக்கப்படும். மேலும், காலை 5 மணி முதல் 10 மணி வரை வரை ஃபரிதாபாத் நோக்கி பின்வரும் இடங்களிலிருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படாது. அதன்படி, ‘புல் பிரஹலாத் பூரின் டி-பாயிண்ட், கா்னி சிங் ஷூட்டிங் ரேஞ்ச் டி-பாயிண்ட், சங்கம் விஹாா் கட், கா்னி சிங் படப்பிடிப்புத் தளம்’ ஆகிய சாலைகளை பொதுமக்கள் தவிா்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறாா்கள். ஃபரிதாபாத் மற்றும் பிற உள் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள், போக்குவரத்தில் ஏற்படக்கூடிய தாமதங்களுக்கு இடமளிக்கும் வகையில், போதிய நேரத்துடன் புறப்பட வேண்டும். குறிப்பாக, தில்லியில் இருந்து ஃபரிதாபாத் செல்லும் பயணிகள் மதுரா சாலை வழியாக செல்ல வேண்டும்.எம்.பி. சாலையில் இருந்து ஃபரிதாபாத் செல்லும் பயணிகள் பதா்பூா் எல்லை வழியாக செல்லமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது