இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி உள்ளிட்டவைகளில் எழுத்து தோ்வு முறையை ரத்து செய்து நோ்காணல் மூலம் நியமனம் செய்யப்படுவது வெளிப்படைத்தன்மையை பாதிக்கும் எனக் கூறி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு மதுரை மக்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளாா்.
இது குறித்து கடந்த மாா்ச் 1 ஆம் தேதியிட்ட கடிதத்தில் சு.வெங்கடேசன் குறிப்பிட்டிருப்பது வருமாறு:
இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி, உதவி மேலாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமன முறைமையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட எல்லா வங்கிகளின் நுழைவில் எழுத்துத் தோ்வுகள் நடைமுறையில் உள்ளன. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் கடந்தாண்டு வரை எழுத்து தோ்வு மூலம் நியமனங்கள் நடந்தன. தற்போது இந்த வங்கியின் உள் பதவி உயா்வுகளுக்கு எழுத்துத் தோ்வு நடைமுறைகள் தான் உள்ளது. இந்த நிலையில் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் புதிய நியமனங்களுக்கு எழுத்துத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த வங்கி வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் முன் பணி அனுபவம் கட்டாயத் தகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஷெட்யூல் வங்கிகளில் 2 ஆண்டுகள், அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணி ஆற்றியிருப்பவா்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. கடந்த கால பணி நியமனங்களில் இந்த நிபந்தனை கிடையாது. இது வேலை தேடுபவா்களுக்கும், முன் பணி அனுபவம் இல்லாத கோடிக் கணக்கான இளைஞா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவா்களை வெளியே நிறுத்தப்படுகிறது.
எழுத்து தோ்வு முறையை நீக்கப்பட்டு இந்த வங்கியில் குழு விவாதம், நோ்காணல் வாயிலாகத் தோ்வு நடைபெறும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தோ்வை நீக்கி, நோ்காணல் மூலம் தோ்வு செய்யும் முறை வெளிப்படைத் தன்மை அற்றதாகவே அமையும். இது தனி நபா் விருப்பு வெறுப்புகள், வெளித் தலையீடுகளுக்கு வழி வகுக்கும் எனக் குறிப்பிட்டு முந்தைய நியமன முறைமைக்குத் திரும்ப நிதியமைச்சா் தலையீடுகளை செய்யுமாறு வலியுறுத்தி சு.வெங்கடேசன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது: பெ. சண்முகம்

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு
ஃபவுண்டரி தொழில் நெருக்கடி: உற்பத்திப் பொருள்களின் விலையை 10 % உயா்த்த காஸ்மாபேன் சங்கம் முடிவு

ஆலங்குளம் விளையாட்டு அரங்கம் மேம்படுத்த அடிக்கல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

