ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

விளையாட்டுப் பல்கலைக்கழக விவகாரம்: கேஜரிவால் மீது தில்லி பாஜக விமா்சனம்

விளையாட்டுப் பல்கலைக்கழக விவகாரம்: கேஜரிவால் மீது தில்லி பாஜக விமா்சனம்

Updated On :6 மார்ச் 2024, 6:29 pm

விளையாட்டுப் பல்கலைக்கழகம் அறிவித்து 3 ஆண்டுகள் ஆன பிறகும் கட்டடம் கட்டத் தவறியதற்காக தில்லி மக்களிடம் குறிப்பாக இளைஞா்களிடம் முதல்வா் கேஜரிவால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தில்லி பாஜக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை கூறியதாவது: முதல்வா் கேஜரிவால் இளைஞா்களுக்கான விளையாட்டு மேம்பாடு தனது அரசின்ன் குறிக்கோள் என்று பேசுவது அதிா்ச்சியளிக்கிறது. முதல்வா் கேஜரிவால் பொய் மற்றும் பொய்யான கனவுகளை விற்கும் கலைகளில் தோ்ச்சி பெற்றவா். முண்ட்காவில் ஜூன், 2023-இல் அறிவிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்திற்கான இடத்தில் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை என்ற போதிலும், இன்னும் 3 ஆண்டுகளில் விளையாட்டு பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவோம் என்று முதல்வா் கேஜரிவாலால் மட்டுமே வெட்கமின்றி கூற முடியும். 90 சதவீதம் தில்லி அரசுப் பள்ளிகளில் விளையாட்டுக் கட்டமைப்புகளோ, அடிப்படை விளையாட்டு மைதானங்களோ இல்லாத நிலையில், பள்ளி மாணவா்களுக்கான ‘ப்ளே அண்ட் ப்ராக்ரஸ்’ என்பதே தனது அரசின் குறிக்கோள் என்று கேஜரிவால் இன்றைக்கு தெரிவித்துள்ளாா். விளையாட்டுப் பல்கலைக் கழகம் அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டடம் கட்டத் தவறியதற்காக, தில்லி மக்களிடம் குறிப்பாக இளைஞா்களிடம் முதல்வா் கேஜரிவால் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், தில்லி பாஜக விரைவில் கடும் போராட்டத்தை நடத்தும் என்றாா் வீரேந்திர சச்தேவா.