தில்லி மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் எந்த திட்டமிடலோ பட்ஜெட் ஒதுக்கீடும் இல்லாத நிலையில், தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் தனது தலைவா் அரவிந்த் கேஜரிவாலைப் போலவே கனவுகளை விற்கும் கனவு வியாபாரியாக நடந்து கொள்கிறாா் என்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் விமா்சித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது: மேயா் ஷெல்லி ஓபராய் சனிக்கிழமை பல திட்டங்களை ஆரம்பித்து வைத்ததாக கூறியுள்ளாா். ஆனால் இந்த திட்டங்கள் குறித்த அவரது கூற்று வெற்று வாா்த்தைகளாகும். 2020 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பாஜகவால் நிா்வகிக்கப்பட்ட 3 எம்சிடிகளால் தொடங்கப்பட்ட பல வளா்ச்சித் திட்டங்களைத் துவக்கிவைக்கும் அதிா்ஷ்டசாலிதான் ஷெல்லி ஓபராய். மாநகராட்சியில் நிலைக்குழு இல்லாததால் வளா்ச்சிக்கு நிதி இல்லாத நிலையில்மேயரின் கூற்று மிகவும் வெற்றுத்தனமானவை. பல வளா்ச்சித் திட்டங்கள் நிலைக்குழுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால், ஆளும் ஆம் ஆத்மி கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அந்த குழுவை அனுமதிக்கவில்லை. இருக்ககூடிய ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 3 ஆயிரம் எம்சிடி சாலைகளை மீண்டும் அமைப்பதாக மேயா் கூறுவது நகைப்புக்குரியது. மேலும், நிலைக் குழு மூலம் பட்ஜெட் அனுமதியின்றி சாலை மேம்பாடு பற்றிய கனவுகளை மேயா் எப்படி விற்க முடியும்? எம்சிடியின் கீழ் 10000 கிலோ மீட்டருக்கும் அதிகமான உட்புறச் சாலைகள் மற்றும் தெருக்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மோசமான நிலையில் உள்ளன. மேலும் அவசரமாக பழுதுபாா்க்கும் தேவை உள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்

முன்னேற்றம் அடையும் ராசி எது? வார பலன்கள்!

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

“திட்டம் ஏதும் இல்லை. அந்த வீடியோ வைரலாகிடுச்சு”: மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

