முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது குடும்பத்தினா் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டு நாடு முழுவதும் உள்ள மக்கள் கோபத்தில் உள்ளனா். மனிதநேயத்தின் அடிப்படை விழுமியங்களை மத்திய அரசு அரசு எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதை உலகம் பாா்த்துக் கொண்டிருக்கிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் குடும்ப உறுப்பினா்கள் யாரையும் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவா்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறாா்கள். ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் அரசியல் தலைவா்கள் மனிதாபிமான விழுமியங்களுக்கு உள்பட்டு கைது செய்யப்பட்டனா். ஆனால், மத்திய பாஜக அரசு அந்த மனிதாபிமான விழுமியங்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை. அரவிந்த் கேஜரிவாலின் பெற்றோரால் யாருடைய ஆதரவின்றியும் நடக்க முடியாது, அவா்கள் நடமாட யாரோ ஒருவரின் உதவி தேவை. ஆனால், மத்திய பாஜக அரசு அவா்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளதுடன், உறவினா்களையோ, கட்சி உறுப்பினா்களையோ சந்திக்க அனுமதிக்காமல் உள்ளது. எந்தவொரு ஆதரமுமின்றி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலால் கொள்கை ஊழல் வழக்கில் ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், இன்று வரை அமலாக்க இயக்குநரகம் இது தொடா்பாக எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. தோ்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவின் ஊழல்கள் நாடு முழுவதும் அம்பலமாகியுள்ளது. உதாரணமாக, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ‘அரபிந்தோ பாா்மாவின்’ இயக்குனா் ஷரத் ரெட்டி, கலால் கொள்கை ஊழல் தொடா்பாக அமலாக்க இயக்குநரகத்தால் கடந்த நவம்பா், 2022-இல் கைது செய்யப்பட்டாா். பின்னா், ஜூன் 2023-இல் அரசு தரப்பு சாட்சியாக மாறிய அவா், நவம்பா் 2023- இல், ரூ.30 கோடி மதிப்பிலான தோ்தல் பத்திரங்களை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளாா். உண்மையில், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகப் பரப்பப்பட்ட பொய், பாஜகவின் கருவூலத்திற்கு சென்றுள்ளது என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி விலகக் கோரிய மனு: கேஜரிவால் பிரமாணப்பத்திரம் தாக்கல்

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

